“1,2,3,4,5,6,7,8,9,0” என்ற
எண்ணுக்கு முறையே “க,
உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ஓ” .
இதை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வாக்கியமாக எழுதினால் பொதும். அதாவது:
“க” டுகு, “உ” ளுந்து,
“ங” னைச்சு, “ச” மைச்சு,
“ரு” சிச்சு, “சா” ப்பிட்டேன், “எ” ன,
“அ” வன் “கூ” றினான்,
“ஓ” என்றேன்.
தமிழின் சுவை அப்போது புரிந்தது.
சும்மாவா
சொன்னாங்க தமிழுக்கும் அமுதென்று பேர்….